இப்டி ஒரு ரீல் வீடியோ யாருமே பண்ணிருக்க மாட்டாங்க.. நீங்க மட்டும் எப்டி இப்டி.. வாணி போஜனின் Latest Video

Vani bhojan reels video getting viral on internet

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஓர் இரவு, அதிகாரம் 79 என்னும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன், ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார்.

பின்னர், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்தார். இதற்கு பல விருதுகளை பெற்ற இவர், பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரது நடிப்புத் திறமை பார்த்து திரைபடவாய்ப்புகள் வர தொடங்கவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.

ஓ மை கடவுளே மீரா அக்கா கதாபாத்திரம் செம பேமஸ், லாக்கப், மலேஷியா டு அம்னிஷியா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கைவசம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ் என பிரபலம் பெற்ற இவர், தனது போட்டோ வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post