Black & White வீடியோவில் கருத்து தெரிவித்த சமந்தா.. எதுக்கு இப்டி திடீர்னு போட்ருக்காங்க..?
பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை சமந்தா. நீதானே எந்தன் பொன்வசந்தம் , நான் ஈ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது. இதன் பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.
தெறி, கத்தி, 24 உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் மற்றும் சூர்யா ஜோடியாக நடித்த இவர், தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடல் பட்டிதொட்டியெங்கும் செம பேமஸ் ஆனது. தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்திலும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.