ரஜினி படத்திற்காக 8 பேக் வைத்தார்.. விழுந்து.. அடி வாங்கி நிறைய சிரமப்பட்டோம் - ஷெரின்
வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் பழனிவேல் தயாரிப்பில் வெங்கடேஷ் அவர்கள் இயக்கும் திரைப்படம் ரஜினி. இதில் விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ளனர். மேலும் அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அப்போது படத்தின் நடிகை ஷெரின் பேசியதாவது: ‘படத்தில் விஷுவல் மற்றும் பாடல் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. படத்தின் ஹீரோ விஜய் சத்யா 8 பேக் வைப்பதற்காக பயங்கர பயிற்சியில் ஈடுபட்டார்.
அவரை பார்க்க வைத்து நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேத்தினேன். இயக்குனர், ஹீரோ என அனைவரும் நங்கள் கடின உழைப்பை போட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி நிறைய சிரம பட்டுள்ளோம். நிச்சயம் இந்த பட ரசிகர்களுக்கு பிடிக்கும்’ என கூறினார்.
Share this post