வெயில் படுற இடமெல்லாம் மின்னுது.. வெளிச்சத்தில் பக்காவாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்
மாடலிங்கில் செம கலக்கு கலக்கி வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிரபல முன்னணி ஐடி நிறுவனமான TCS பின்னர் இன்போசிஸ் போன்ற கம்பெனிகளில் செய்த வேலையை விட்டுவிட்டு தனது மாடலிங் கனவை கையிலெடுத்தார் சாக்ஷி.

ஜில்லென்று ஒரு கலவரம் என்னும் பாடல் ஆல்பமில் நடித்த பிறகு கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆனார். இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், யோகன், திருட்டு VCD போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விஸ்வாசம், குட்டி ஸ்டோரி படத்தில் நடித்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் காதல் கிசு கிசு போன்ற விமர்சனங்கள் இவரது பெயர் அடிபட்டது. அதன் பின்னர், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆனா சாக்ஷி, தனது போட்டோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது நெட்டெட் உடையில் இவரது புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.