எத மறைச்சாலும் அத மட்டும் மறைக்கவே மாட்டேன்.. ரேஷ்மா பதிவிட்ட டக்கர் ஸ்டில்ஸ்
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரது மகள் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பாரினில் படிப்பு முடித்து இந்தியா திரும்பிய இவர், TV5 என்னும் ஆங்கில செய்தி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, வம்சம் தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீரியல் விட்டு மசாலா படம் என்னும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ரேஷ்மா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து, கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை, பேய் மாமா போன்ற படங்களில் நடித்தார்.

பல சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோல் நடித்து வருகிறார். மேலும், விலங்கு என்னும் ஜீ சீரிஸ்ல் நடித்துள்ளார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்றிருந்தார்.

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சேலையில், தற்போது இவர் போட்டுள்ள போட்டோஸ் செம லைக்ஸ் வாங்கி வருகிறது.
