மீண்டும் நம்ம ரம்யா பாண்டியன் ஸ்டைல்'ல இன்னும் கிளாமர் தூக்கலான போட்டோஷூட்..!
மறைந்த முன்னாள் இயக்குனர் துரை பாண்டியன் அவர்களின் மகள் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரம்யா, அதனைத் தொடர்ந்து, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

3 திரைப்படங்களில் நடித்தாலும் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பிரபலம் அடைந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் மூலம் மேலும் பரிச்சயம் ஆனார். பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமும் இருந்தது. பிரபல நடிகர் அருண் பாண்டியன் இவரது சித்தப்பா ஆவார்.

தற்போது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் நடித்து முடித்த இவர், 2 புது படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை விடாது செய்து இளசுகளை இம்சை செய்து வருகிறார்.

தற்போது ரெட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார்.