போஸ் ஒவ்வொன்னும் ஒடம்ப முறுக்குது.. Chocolate beauty பிரியாமணியின் வேற லெவல் க்ளிக்ஸ்..
மாடலாக அறிமுகமாகி பேன் இந்தியா லெவல் நடிகையாக மாறியுள்ளவர் நடிகை ப்ரியாமணி. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மேலும் சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், பருத்திவீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தியிருப்பார்.

இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றார். தமிழில் ராவணன், சாருலதா போன்ற படங்கள் இவர் நடிப்பு திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது.

கண்களால் கைது செய், அது ஒரு கனா காலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா என பிரபல நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள ப்ரியாமணி, சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மேலும், சில ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் இருந்துள்ளார்.

தற்போது தனது போட்டோஸ்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது செம ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்படங்கள் அப்லோட் செய்துள்ளார்.