துணை கதாபாத்திரங்களில் நடித்த பிரபல ரேடியோ மிர்ச்சி RJ மாரடைப்பால் காலமானார்..
பெங்களூருவில் ஜே.பி. நகரில் வசித்து வந்தவர் பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா. இவர் 2013ம் ஆண்டு வெளியான ‘சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி’ என்ற கன்னட படத்தில் ரக்சித் ஷெட்டியின் தங்கையாக நடித்து இருந்தார்.
மேலும், ‘ரேடியோ மிர்ச்சி’ சேனலில் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தனது கலகலப்பான நிகழ்ச்சிகளால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்த இவர், தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே ரச்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 39 வயதான திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆர்.ஜே. ரச்சனா இறந்த செய்தி அறிந்த கன்னட திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
Share this post