உலக நாயகனின் விக்ரம் ஷூட்டிங் நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் வீடியோ
மாநகரம் என்னும் சிறிய பட்ஜெட் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிவிட்டார்.
இதையடுத்து, கைதி திரைப்படம், கார்த்தி நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் அளவுக்கு கலப்படமான விமர்சனம் பெற்று தனத்தாலும் வெற்றி கிடைத்தது. இதன்முலம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்தார்.
தற்போது கமல்ஹாசன் கூட்டணி ‘விக்ரம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாகவும், சம்பத்ராம், செம்பன் வினோத், மகாதேவன், கோகுல்நாத், ஹாரிஸ் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக நடித்துள்ளனர்.
அதிரடி ஆக்சன் படமாக தயாராகி வந்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழு பெரிய சைஸ் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர். இதன் தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.