AK61 திரைப்படத்தின் படக்குழு குறித்து வெளியான தகவல்.. அடேங்கப்பா பிரம்மாண்ட லிஸ்ட் தான் ..!
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது AK61 படத்திலும் இவர்கள் இணைய போகின்றனர். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க போகிறார்.
வரும் மார்ச் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. அதற்கான பிரம்மாண்ட செட் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் மோகன்லால், பிரகாஷ் ராஜ் மற்றும் தபு ஆகியோர் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, சின்னத்திரை பிரபலம் கவின் அவர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share this post