வெளியானது சியானின் 'கோப்ரா' ரிலீஸ் தேதி ! இயக்குனர் வெளியிட்ட அப்டேட்!
2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் தற்போது மஹான் திரைப்படத்தில் தான் விக்ரம் பார்க்க முடிந்தது. இதன் நடுவே, துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வந்த நிலையிலும் எந்த வித அப்டேட் இல்லாமல் ரசிகர்கள் காத்து கிடந்தனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வந்தார் விக்ரம். இதன் போஸ்டர், விக்ரம் லுக் அனைத்தும் பெரிய ஆர்வத்தை தூண்டியது. இவர் ஏற்கனவே 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.
கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகவும், கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் 14.02.2022 அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இயக்குனர் அஜய் டிவிட்டரில் மே மாதம் 26ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
