Viral Photos & Videos : மறைந்த கன்னட பிரபலம் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்..
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் 29ம் தேதி எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகத்தினர் மற்றும் மக்கள் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
46 வயதில் காலமான புனீத் அவர்களின் உடலை பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரிவில் உள்ள அவருடைய நினைவிடத்தை இன்றும் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து மரியாதை செய்து வருகின்றனர். அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸை அவரது முதல் பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்றுள்ள தளபதி விஜய்.

அங்கு புனீத் படத்திற்கு தீபாதரனை காட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

