முகம் சுளிக்க வைத்த சல்மான் கான் -பூஜா ஹெக்டே டான்ஸ் வீடியோ.. அட அவரு இதுதான் try பண்ணிருக்காரு..!

Salman khan pooja hedge dane moves video viral on social media

மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே, 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் வேற லெவல் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் பேமஸ் ஆனார். புட்ட பொம்மா பாடல் மூலம் இந்திய லெவல் பேமஸ் ஆனார். தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே மேடை விழா ஒன்றில் பங்கேற்றனர். அதில் தன் படத்தில் வருவது போல அவரது உடையை கடித்து ஸ்டெப் போட முயற்சித்தார் சல்மான் கான். ஆனால், அவர் அணிந்திருந்த உடையில் அதற்கு சரிப்படவில்லை. இந்த நடன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது சிலர் முகம் சுளிக்க வைப்பதாக கூறி வருகின்றனர்.

Share this post