ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை.. சிங்கபெண்ணுக்கு ஒரு சல்யூட்..!
2021ம் ஆண்டு வெளியான ’காதம்பரி’ என்னும் திகில் திரைப்படத்தில் சமூக கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான இவர் நடிப்பு மீது இருந்த விருப்பத்தின் பெயரில் தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
நடிப்பது மட்டுமல்லாது பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது நீண்ட நாள் ஆசையான ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, மிக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையோடு, வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார் அகிலா.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணனை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.