குடிகாரனா நடிக்க இப்டி கண்ணுக்குள்ள எல்லாம் கை வெச்சு யப்பா.. பாக்கவே ஒடம்பு சிலிர்க்குது.. வீடியோ பதிவிட்ட சீரியல் நடிகர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டாப் இடங்களை பிடித்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. 3 வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரங்கள் சூப்பர் மார்க்கெட் திறப்பு பற்றி ஒளிபரப்பாகி சீரியஸ் ஆக ஓடி வந்த இந்த தொடர், இந்த வாரம் செம ஜாலியாக இருந்தது. அதிலும் ஜீவா மது அருந்திவிட்டு செய்த கலாட்டாக்கள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ஜீவா என்கிற வெங்கட் தனது இன்ஸ்டாவில், எனது காட்சிகளை பார்த்து மக்கள் சிரித்து மகிழ்ந்ததாக கமெண்ட் செய்வது சந்தோஷமாக இருக்கிறது.
சிலர் நிஜமாக மது அருந்திவிட்டு நடித்தீர்களா என கேட்கின்றனர், அவர்களுக்கு நான் இந்த காட்சி நடிக்க என்னென்ன செய்தேன் என தெரிந்துகொள்ள ஒரு குட்டி வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
