மாநாடு தெலுங்கு ரீமேக் : யாரு எந்த ரோல்'ல நடிக்கிறாங்க தெரியுமா..?
நீண்ட கால உழைப்புக்கு பின்னர், சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் டைம் லூப் கான்செப்ட் வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை யாரும் எடுக்காத வகையில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன வரவேற்பை பெற்றது. இதில் ஹீரோ சிம்பு என்பதை விட கதை, எஸ்.ஜே. சூர்யா expression, சிம்பு அவர்களின் லுக் எல்லாமே மன நிறைவாக அமைந்திருந்தது.
இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மாற்றும் டப்பிங் உரிமை இரண்டையும் தெலுங்கு பிரபலம் நடிகர் ராணா அவர்களின் தந்தையின் நிறுவனமான சுரேஷ் ப்ரொடக்க்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளார். டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்வதில் அதிகம் ஆர்வம் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாக சைதன்யா - பூஜா ஹெக்டே நடிக்க வெங்கட் பிரபு இயக்குவார் என பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
பாராட்டுகளை குவித்த எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்தில் ராணா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.