கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு குறித்து வெளியான அப்டேட்..

Karthi sarthaar film shooting update has been rumoured on internet

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றத்தைத் தொடர்ந்து, அவரது 22வது திரைப்படமாக உருவாகி வருவது சர்தார். இது கூடவே, பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படத்தின் படப்பிடிப்பினை நடித்து வந்தார்.

சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

Karthi sarthaar film shooting update has been rumoured on internet

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர், ஆர்ச்சா, குவாலியர் போன்ற இடங்களிலும், விருமன் படப்பிடிப்பு மதுரை, தேனி மாவட்ட பகுதியில் நடந்தது. இதன் காரணமாக சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் நடிகர் கார்த்தி குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், விடுமுறை தின கொண்டாட்டத்திற்காக ஏற்காட்டில் ஓய்வு எடுக்கிறாரா? அல்லது சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஏற்காடில் நடந்து வருகிறதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர்.

சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணாவும் இணைந்துள்ளார். சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவுற்றதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌.

Karthi sarthaar film shooting update has been rumoured on internet

Share this post