மாறன் OTT காரணம்: அட ஆமாங்க மாறன் ட்ரைலர்'ல அந்த படத்தோட சாயல் இருக்க மாதிரி தான் இருக்கு..!

Dhanush maaran film seems to be like ko film directed by k.v.ananth

ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் திரைப்படங்களை தொடர்ந்து OTTயில் ரிலீஸ் ஆகவிருக்கும் திரைப்படம் மாறன். அடுத்து தயாராகும் ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மென் என்னும் தனுஷ் படமும் OTT வசம் செல்லவுள்ளது.

Dhanush maaran film seems to be like ko film directed by k.v.ananth

இதில், தனுஷ் விருப்பமில்லாமல் சில படங்கள் OTTயில் வெளியானாலும், சில படங்களை தனுஷே OTTக்கு பரிந்துரைத்துள்ளாராம். அதில் ஒன்று தற்போதுமாறன். இந்த படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே , கதை காரணமாக இயக்குனருக்கும், தனுஷிற்கும் பிரச்சனை எழுந்ததாக தகவல் சொல்லப்படுகிறது.

அதன் பின்னர், படத்தின் பைனல் அவுட் தனுஷ் மனதிற்கு விருப்பப்படாத நிலையில், அவரே OTTக்கு பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் படத்தின் டிரைலரும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதில், தனுஷ், மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாகவும், ஒரு அரசியல்வாதியை எதிர்த்து தனுஷ் போராடுவது போல கதை காட்டப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும், மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிப்பில் வெளியான கோ படத்தின் ட்ரைலரை பார்த்தது போல இருக்கிறது என சிலர் கூறி வருகின்றனர்.

Dhanush maaran film seems to be like ko film directed by k.v.ananth

இதனால் தான் தனுஷ் படத்தினை OTTக்கு கொடுக்க சொன்னார் போல என ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

Share this post