சீனாவில் வெளியாக போகும் கனா.. ட்விட்டரில் உற்சாகத்தை பகிர்ந்த நடிகை..
2018ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா.
சாதிக்க நினைக்கும் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ், விவசாயிகளின் பரிதாபத்தை அப்படியே கண் முன்னே காட்டிய சத்யராஜ் என படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

தனது முதல் தயாரிப்பு படத்திலேயே கிரிக்கெட் கோச்சாக முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். இதில் வாயாடி பெத்தபுள்ள என்னும் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா இணைந்து பாடியிருந்தார். இதன் மேக்கிங் வீடியோ செம வைரல் ஆனது. இன்றளவும் இந்த பாடல் பேமஸ்.

படம் வெளியாகி 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தற்போது சீனாவில் கனா படம் வெளியாகவுள்ளது. இந்த செய்தியை படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்துடன் உள்ளது.
Thrilled and delighted to announce that one of my favourites, #Kanaa, is to release in China on March 18 @Arunrajakamaraj @Siva_Kartikeyan @SKProdOffl @dhibuofficial @dineshkrishnanb @Darshan_Offl pic.twitter.com/8q6xrnpWBn
— aishwarya rajesh (@aishu_dil) February 25, 2022