வைரலாகும் புகைப்படம்.. அப்போ இனி தனுஷ் - ஐஸ்வர்யா சேர வாய்ப்பில்லையா..
தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்களாக வலம் வருபவர்கள் தனுஷ், ஐஸ்வர்யா. இவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த மாதம் இவர்கள் அறிவித்திருந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிவு குறித்து பல காரணங்கள் வெளியாகி வரும் நிலையிலும், அதற்கான உண்மையான விளக்கத்தை இருவரும் அறிவிக்கவில்லை.
தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான், விவாகரத்து இல்லை என கூறி வந்தார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ஒரு பாடல் வீடியோ தயாரிப்புக்காக தனது க்ருவுடன் உரையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ, இணையத்தில் சமீபத்தில் வைரலாகி வந்தது.
அதன் பின்னர், ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் பாடல் வீடியோவை உருவாக்கும் வேலைகளில் களமிறங்கி அதன் ப்ரோமோ வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.
தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடி தயாராகி வரும் இப்பாடல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.

இதனால் இருவரும் இணையும் வாய்ப்பில்லை என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.