AK 61 Big Update: தீபாவளி ரிலீஸா...? ஹைதராபாத்தில் பிரமாண்ட செட்..! இந்த வருஷம் டபுள் ட்ரீட் தான்..!

Ak 61 update hyderabad set has been ready for march shoot expected for diwali release

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் இணைந்து ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.

ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இப்படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி தொடங்கவிருப்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொடங்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணி பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டு 7 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து இந்த ஆண்டே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏகே 61 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால், அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் டபுள் ட்ரீட் என சொல்லப்படுகிறது.

Share this post