படப்பிடிப்பில் விஷாலுக்கு எற்பட்ட காயம் - ஷூட்டிங் ஒத்திவைப்பு..

Vishal got hurt during laththi movie shooting during fight scene

லத்தி என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த 55 நாட்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக 30 நாட்கள் திட்டம் போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

பைட்டர்ஸ்களுடன் சண்டை போட்டு குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுதில் கான்க்ரீட் சுவற்றில் மோதி விஷாலுக்கு கையில் அடிப்பட்டது. அடிபட்டதையும் பொருட் படுத்தாமல் சில மணிநேரம் ட்ரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படபிடிப்பில் கலந்து கொண்டார் விஷால்.

Vishal got hurt during laththi movie shooting during fight scene

கை வலியுடன் படபிடிப்பில் படபிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனதால், கைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு படபிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தனர். இதனால், கேரளாவுக்கு சென்று விஷால் ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். கை சரியானதும் மீண்டும் மார்ச் மாதம் படபிடிப்பு தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this post