BB Ultimate ப்ரோமோஷூட் காட்சிகளா இது..? வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24மணி நேர நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
தவிர்க்க முடியாத சில காரணத்தால் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத காரணத்தினால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் யார் வருவார் என ரூமர் கிளம்பி வந்த நிலையில், சிம்பு நிகழ்ச்சியில் கமிட்டாகி இருப்பதாக சில தகவல்கள் தெரிவித்தன.
இன்று புரொமோ ஷுட் எடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நடிகர் சிமபுவின் புதிய லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதுதான் சிம்புவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லுக்கா அல்லது வேறு ஏதாவதா என்பது தெரியவில்லை.
இந்த புகைப்படம் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Share this post