சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக மாறும் சியான் விக்ரம்..
முதலில் வில்லன் ரோல் என்றாலே மிக மோசமாக கொடூரமாக காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது வில்லன் என்றாலே நடிகருக்கு இணையாக கருதப்படுகிறது. இதனால் முன்னணி கதாநாயகர்கள் கூட வில்லனாக நடிக்க தயங்குவதில்லை. வில்லன் கேரக்டர் கூட ரசிக்க கூடிய அளவிற்கு காட்டப்படுவதால், தயக்கமே இல்லாமல் வில்லன் ரோல் ஏற்று வருகின்றனர்.
எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன், சமுத்திரக்கனி என வில்லனாக நடித்து ஸ்கோர் செய்து வருகின்றனர். அந்த வகையில், சியான் விக்ரமும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க த்ரிவிக்ரம் இயக்க உள்ள திரைப்படத்தில் சியான் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க கேட்கவே சியான் தரப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
