மீண்டும் பிக்பாஸில் பிந்து மாதவி.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. ஆனா இது தா டுவிஸ்ட்..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது அல்டிமேட் என புது வெர்ஷன் ஹிந்தியில் நடந்து முடிந்துவிட்டது. தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல் ஹாசன் இதற்கு தொகுத்து வழங்கி வந்தார்.

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கமல் ஹாசன் பதிலாக சிம்பு தொகுத்து வழங்க முடிவாகியுள்ளார்.

இதற்கு முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பங்கேற்க வைத்து வரும் நிலையில், தற்போது தெலுங்கு மொழியிலும் இதை தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகு த்து வழங்கி வருகிறார்.

இதில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், அதில் நடிகை பிந்து மாதவியும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
