ரைசா வெளியிட்ட Unseen Pics... இணையத்தில் செம வைரலாகும் புகைப்படங்கள்..
மாடலிங்கில் கொண்ட தீரா காதலினால் மாடலிங் செய்ய தொடங்கிய ரைசா வில்சன், Miss India South 2011, HICC Femina Miss South Beautiful Smile award போன்ற பல பட்டங்களை வென்ற இவர், தனுஷ், அமலா பால் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் கஜோல்ன் PAவாக நடித்திருப்பார்.

அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்த இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே அமைந்தது.

இதன் மூலம் நிறைய பாராட்டுக்கள், வரவேற்புகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பியார் பிரேமா காதல், வர்மா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் தனது போட்டோ மற்றும் வீடியோ அதிகம் பகிரும் ரைசா, தனது FIR ஷூட்டிங் போட்டோஸ்களை பகிர்ந்துள்ளார்.

