குளியலறையில் சோப்பு நுரையுடன் பிக்பாஸ் நடிகரின் கன்னத்தை கடித்த திவ்யா ! வெளியான போஸ்டர் !
மாடலாக அறிமுகமாகி 2021 ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி. ஹாட் கனவுக்கன்னியாக வலம் வரும் இவர், கவர்ச்சியான உடல்வாகும், நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
முதல் திரைப்படத்திலேயே செம வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது பிக்பாஸ் புகழ் முகன் ராவ் நடிக்கும் மதில் மேல் பூனை திரைப்படத்தில் திவ்யா பாரதி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது. அதில் குளியலறையில் சோப்பு நுரையோடு இருக்கும் இருவரும், முகன் ராவின் கன்னத்தை கடிக்கும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து மலையாளத்தில் ஹிட்டான இஷ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பரியேறும் பெருமாள் கதிர் ஜோடியாக திவ்யாபாரதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
