ஒரு நிமிஷம் டிக்டாக் இலக்கியான்னு நெனச்சோம்.. Expression வேற மாதிரி.. காயத்ரி யுவராஜ் வெளியிட்ட வீடியோ
சென்னையில் பிறந்து வளர்ந்த காயத்ரி யுவராஜ், தென்றல் என்னும் சன் டிவி பிரபல தொடர் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார்.

மேலும், சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் முத்தழகாக பல வருடங்கள் வாழ்ந்து வந்தார். மேலும், ப்ரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோஹினி, களத்து வீடு, அரண்மனை கிளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.
தற்போது சித்தி 2 சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் யுவராஜை திருமணம் செய்து கொண்ட இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் இவரது expression பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.