விக்ரம் ஷூட்டிங் ஓவர் ! இயக்குனர் லோகேஷ் வெளியிட்ட மாஸ் வீடியோ !

Lokesh kanagaraj updates video on vikram movie shooting completion

2018ம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. பல வகையான விமர்சனம் பெற்ற இப்படத்தை தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து, கமல் அவர்களின் அரசியல் வேலை, கொரோனா பரவல் என படம் ஷூடிங் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், கைதி, மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் ஷூட்டிங் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார்.

Lokesh kanagaraj updates video on vikram movie shooting completion

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆன நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மொத்தம் 11O நாட்கள் படப்பிடிப்பு நடந்து தற்போது முடிவடைந்துள்ளது என ட்விட்டர் பக்கத்தில் பதிவை போட்டுள்ளார் லோகேஷ் . இருப்பினும் இப்படத்தின் கதையம்சம் பற்றி இன்றளவும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Share this post