ட்ரெஸ்'அ தேடுறதா.. ட்ரெஸ்'ல தேடுறதான்னு ஒரே குழப்பம்.. அதிதி ராவின் ரீசென்ட் போட்டோஸ் !
நடிகை, பாடகி, டான்சர் போன்ற பல திறமைகளை வைத்துள்ள அதிதி ராவ், மலையாள மொழி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள அதிதி, ஸ்ரீரங்கம் என்னும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Yeh Saali Zindagi என்னும் ஹிந்தி திரைப்படத்தில் சப்போர்டிங் ரோலுக்கான அவார்ட் பெற்றுள்ளார். மேலும், ராக்ஸ்டார், மர்டர் 3, பாஸ், வாசிர் போன்ற ஹிந்தி திரைப்படங்கள் இவர் நடிப்பில் பெரும் வெற்றிபெற்றது.

தமிழில் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்த அதிதி, சைக்கோ மற்றும் செக்க சிவந்த வானம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது, துல்கர் ஜோடியாக இவர் நடிப்பில் ஹே சினாமிக்கா திரைப்படம் வெளியாகி செம ஹிட்டாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் அதிதி, தற்போது கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.