Viral Photo: சில வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை தோனியிடம் காட்டி நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்..
போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து, VIP படத்தில் தனுஷ் உடன் சிறிய கதாபாத்திரத்தில் அங்கு இங்கும் வந்து போகும் விக்னேஷ் சிவன், தற்போது பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரை என பல முகங்களை கொண்டு விளங்கி வருகிறார்.
தனது 2வது படம் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடி தான் வெளியாகி ஒரே படத்தில் ஜாக்பாட்டாக பெயர், புகழ் என வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து, சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார்.
நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றியதால் காதல் கொண்ட நயன் - விக்கி விரைவில் திருமணம் செய்துகொள்ள போகின்றனர். தற்போது, இவர்கள் Rowdy Pictures என்னும் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் இந்த வருடம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தற்போது, அவரது ரோல் மாடலான கிரிக்கெட் வீரர் தோனியுடன் அவர் பணியாற்றி வருகிறார். அதன் புகைப்படங்களை பதிவிட்டு, அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.
