'தலைவர் 170' படம் குறித்து வெளியான தகவல்..!
கடந்த வருடம் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு பின்னர், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை தந்து, தற்போது தளபதியை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலிப் குமார், ’தலைவர் 169’ படத்தை இயக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது.
தற்போது தலைவரின் 170-வது படத்தின் அறிவிப்பை பற்றி ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர். இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கிய நடிகரும், பாடலாசிரியரும், இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் இதனை போனி கபூர் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Share this post