வலிமை படத்தின் பைட் வீடியோ.. சர்ப்ரைஸாக வெளியிட்ட போனி கபூர்..!

Valimai fight video released by boney kapoor as promotion

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் வலிமை. கொரோனா கட்டுப்பாடு, பல சில காரணங்களால் வருட கணக்கில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் இது. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஒரு சண்டை காட்சியை புரமோஷன் வீடியோவாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Share this post