அரபிக் குத்து தொடர்ந்து அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்ச்சர்ஸ்.. செம பாஸ்ட்'ப்பா நீங்க.. We are waiting

Sun pictures releases update about etharkum thuninthavan teaser after arabic kuthu

தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர்களில் பாண்டிராஜ் ஒருவர். இவரது இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் production பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல் சிலது ஏற்கனவே ரிலீஸ் ஆகி வரவேற்பு பெற்று வரும் நிலையில், தற்போது டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வருகிற வெள்ளிக்கிழமை பிப்ரவரி 18 தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Share this post