பாலா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா..? இது என்ன வெரைட்டி'ல இருக்க போகுது !
நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.

சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகவுள்ளது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.
தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவின் நந்தா, பிதாமகன் பெரும் வெற்றியை சூர்யாவுக்கு தந்தது குறிப்பிடத்தக்கது. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக சூர்யா தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஜோதிகாவும் நடிக்க இருக்கிறார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது எனவும் சொல்லவும் படுகிறது.