வா தலைவா.. BB Ultimate ஹோஸ்ட் இவர் தானாம்.. ரெடியாகவிருக்கும் ப்ரோமோ வீடியோ..
உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகி வருகிறது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.
போன நாள் முதல் சண்டைக்கும் பிரச்சனைக்கும் குறைச்சல் இல்லாது நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் சினேகன், ஜூலி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்திய, இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணி எலிமினேட் ஆகினர். மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் அறிவித்தார். கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
ஏற்கனவே கமல் கொரோனா காரணாமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவியபோது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அவரே தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்திய தகவல்படி நடிகர் சிம்பு பிக்பாஸ் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாகவும், அவர் பங்கேற்கும் புரோமோ ஷூட்டிங் நாளை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
