அடேங்கப்பா.. சாய் பல்லவியா இது?.. இன்னா கவர்ச்சியான டிரஸ்'ல போஸ் கொடுக்கறாங்க!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலம். இதில் நடித்திருந்தவர் நடிகை சாய் பல்லவி. இந்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதன் காரணம் , சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு மற்றும் இயல்பான தோற்றம். அதன்பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் மாரி 2, என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்தார்.
மாரி 2 படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி ஆடிய ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் ரெகார்ட் பிரேக் செய்தது. இவர் நடித்த படங்கள் மூலம் பல பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றுள்ளார். தற்போது இவரின் தங்கையும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தெலுங்கில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ஷியாம் சிங்கா ரெட்டி மற்றும் விர்ட்டா பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


