Rise of SK.. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மோஷன் போஸ்டர்..
விஜய் தொலைக்காட்சியில் stand-up comedian ஆக தனது கலை பயணத்தை தொடங்கி பின்னர் ரியாலிட்டி ஷோக்களில் தனது பேச்சுத்திறமை மற்றும் நகைச்சுவை மூலம் தொகுப்பாளராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நண்பராக துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் இவருக்கு அமைந்தது. இதற்கு பல விருதுகளையும் இவர் குவித்தார். பின்னர், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் போன்ற பல வெற்றி படங்களை தந்தார்.
தற்போது, தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டு பிரபலம் அடைந்துள்ளார். பிப்ரவரி 17ம் தேதியான இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, Rise of SK என்னும் வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் எடிட் செய்து அதனை பிரேம்ஜி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.