வாவ்..! என்ன ஒரு ஃபிகர்.. க்யூட் போடோஸ்களில் மனசை கவரும் பிரியா பவானி ஷங்கர்..!
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் வரவேற்பு பெற்று வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்களை பார்த்ததுண்டு. மேலும், படங்களில் டாப் ஹீரோயின் ஆக இருந்து பின்னர் சீரியல்களில் கொடிகட்டி பார்ப்பவர்களும் உண்டு. உதாரணத்திற்கு தேவயானி, ராதிகா, குஷ்பூ என உள்ளனர். ஆனால், தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக பேன் பாலோயர்ஸ் பெற்று பிரபலம் அடைவதும் தற்போது அரங்கேறி வருகிறது.
இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள், ஆர்மி, fan page உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி, ரம்யா என பலரும் உள்ளனர். இதில் ஒரு சிலர் சினிமா மற்றும் சின்னதிரைகளில் நடிக்க ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

அப்படி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார். பின்னர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்த பிரியா பவானி, வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து, மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா, ஷூட்டிங் என பிசியாக வலம் வரும் இவருக்கு, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை மட்டுமின்றி சோசியல் மீடியாக்களிலும் ரசிகர்கள் பின் தொடர்பவர்கள் ஏராளம்.

இதனால், தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளி வருகிறார்.