வெக்கப்பட்டு சிரிக்கிற அளவுக்கு என்ன பாத்தீங்க.. என்னன்னு காமிக்கலாம்ல.. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் பிக்ஸ்..!
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. மும்பை இறக்குமதியான பூஜா, மாடலிங் துறையில் பெரிய இடத்தை பிடித்து வந்தவர்.

முகமூடி படத்தில் தனது பெரிய வரவேற்பு ஏதும் கிடைக்காத நிலையில், தெலுங்கு திரையுலகத்தில் அடியெடுத்து வைத்த, ஒரு சில படங்களிலேயே முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிட்டார்.
தெலுங்கு மொழி மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர், நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த ‘அல வைகுண்டபுரம்லோ’ படத்தில் ‘புட்ட பொம்மா’ பாடல் மில்லியன் வியூஸ் தாண்டி போகவே, அம்மணி பான் இந்திய லெவல் பேமஸ் ஆகிவிட்டார்.

தற்போது, தெலுங்கில் இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்கின்ற அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.
இதனால், அம்மணி கால் ஷீட்டிற்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர். இப்படி செம டிமாண்ட் ஆக இருக்கும் அம்மணி, நீண்ட இடைவெளிக்கு பின்னர், தமிழில் தளபதியுடன் ‘Beast’ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறார். மேலும், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அருவா படத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம்பிடித்து கூடிய விரைவில் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை நிறுத்தாமல், பிகினி உடை, படுகிளாமர் போஸ்கள் என இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.