தயாராகும் பேமஸ் படத்தின் ரீமேக்.. முக்கிய கதாத்திரத்தில் நடிக்கும் நயன்..!
தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, மீண்டும் மோகன்ராஜாவுடன் 3வது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
மலையாள மொழியில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்பாதர்’ படத்தில் நயன் நடிக்கவுள்ளார். இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும், மஞ்சுவாரியர் கேரக்டரில் நயன்தாராவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் மோகன்ராஜாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு கேரளா சென்று விட்டார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
Share this post