'நமது இந்து கடவுளை இப்படி இழிவுபடுத்திய விஜய் படங்களை பார்க்காதீர்கள்' - மதுரை ஆதீனம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் திரையுலகில் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் பெரிதும் இல்லாத போதிலும், ஆண்டுகள் செல்ல தற்போது இவரை பிடிக்காதவரே இருக்காது என்ற அளவிற்கு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

தனது நடிப்பு திறமை, பணிவான குணம் அனைத்தின் மூலம் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை கொண்டு விளங்கி வருபவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி வாகையை சூடி வந்த நிலையில், மாஸ்டர் மற்றும் தற்போது வெளியான பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.

இந்நிலையில், தற்போது விஜய் படங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இருக்கிறது. அதனால் அவர் படங்களை பார்க்காதீங்க என மதுரை ஆதினம் கூறி இருக்கிறார்.

“புள்ளையாரே.. புள்ளையாரே.. உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குது” என விஜய் வசனம் பேசும் படம் ஒன்றை பார்த்தேன். இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என சொல்கிறார்கள். நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” என ஆதினம் கூறி இருக்கிறார்.