கமல்ஹாசன் கருத்துக்கு 14 வருடங்கள் கழித்து பதில் சொன்ன மாயோன் படக்குழு.. Viral Video..
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பல அவதாரங்களுடன் தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விக்ரம். இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

4 வருட இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இப்படத்தின் டர்னிங் பாய்ண்ட் என கூறி இருந்தனர்.

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் தான் இந்த விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

2008ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருப்பார். வித்தியாசமான கதையில் கமல்ஹாசன் விதவிதமான கெட்டப்பில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

தசாவதாரம் படத்தில் கடவுள் இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்கிறேன் என்ற வசனம் கமல் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாக வசனம் இந்த கருத்துக்கு தற்போது மாயோன் படக்குழுவினர் பதில் தெரிவித்துள்ளனர்.

இந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு மாயோன் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மாயம் மாயோன் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த படம் ஜூன் 24ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட சார்பில் நடிகர் சிபி மற்றும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாயோன்’. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
"KADAVUL IRUNDHA NALLA IRUKUM" 14 years long question of #Ulaganayagan. His question has finally been answered. #Maayon has decided to show up with #Vikram Theatrical TRAILER of Maayon FROM June 3rd.#Andavar @ManickamMozhi @ilaiyaraaja @Sibi_Sathyaraj @actortanya #KSRavikumar pic.twitter.com/DX7cxRHXnD
— Double Meaning Production (@DoubleMProd_) June 1, 2022