சமந்தா'வ பீட் பண்ணிருவாங்க போல.. வெளியான கீர்த்தி சுரேஷ்'ன் காந்தாரி பாடல் வீடியோ
யூ டியூப் பிரபலமாக பயன்படுத்தப்பட தொடங்கிய நாள் முதல் பல்வேறு விஷயங்கள் உலகத்தில் எந்த மூலை முடுக்கில் நடந்தாலும் உடனே வெளியாகி வைரலாகி வருகிறது. சிலர் தங்களது பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடனமாடி டான்ஸ் வீடியோ ஆல்பம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏஆர் ரகுமான் இசைக் கல்லூரியில் இசை பயின்ற பவன் இசையில், முன்னணி நடன இயக்குனர் பிருந்தா நடன அமைப்பில் உருவாகியுள்ள காந்தாரி ஆல்பம் படமாக்கப்பட்டு அந்த வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Share this post