சிவப்பு குத்து விளக்கு! செம expressions கொடுத்து வீடியோ போட்ட ரவீனா..
ராட்சசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா, வசந்தம், பவானி, வள்ளி, ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட பிரபல தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழில் பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது மௌனராகம் 2 தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீரியல் மட்டுமல்லாது நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முறையாக கிளாசிக்கல் நடன கலையை பயின்ற ரவீனா, ஜீ தமிழ் டிவியில் நடந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவான DJD 2.O போட்டியில் பங்கேற்று ரன்னர்-அப் ஆனார். தற்போது, மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலம் பெற்றுள்ள ரவீனா, அவ்வப்போது வயதிற்கு மீறிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் வர்ணிக்கும் அளவிற்கு செம கிளாமராக இருந்து வருகிறது.