வ்வ்வா.. அம்புட்டு பேரும் அவுட்டு.. கிறுகிறுத்து போக வைக்கும் பாவனி ரெட்டி ஹாட் ஸ்டில்ஸ்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. பின்னர், பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர், சின்ன தம்பி சீரியல் மூலம் மிக பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். சீரியல் தொடர் மட்டுமின்றி, 465, மொட்ட சிவா கெட்ட சிவா, வஜ்ரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2017ம் ஆண்டு, பாசமலர் சீரியலில் தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகரான பிரதீப் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, பவானி ரெட்டியை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி செய்தது. காரணம் என்னவென்று தற்போது வரை தெரியவில்லை.
இதனால், பவானி ரெட்டி உடல் மற்றும் மனநிலை காரணமாக 6 மாதம் திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார். தன் சோகத்தில் இருந்து மீண்டு வந்த பவானி ரெட்டி, தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் கலப்படமான விமர்சனங்கள் பெற்று வருகிறார்.
இவரது சமூக வலைதளபக்கங்கள் மேனேஜர் மூலம் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில், இவரது சில ஹாட் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.





