கர்ப்ப காலத்தில் இதை கண்டிப்பா செஞ்சு பாருங்க : காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ!

Actress Kajal Agarwal Video For Health Tips Preganacy

மும்பை தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பமானார்.இந்நிலையில் இவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது நீண்ட பதிவுகளை செய்து வரும் காஜல் அகர்வால், தற்போது கர்ப்ப நேரத்தில் செய்ய வேண்டிய ஏரோபிக் என்ற உடற்பயிற்சி குறித்த விவரத்தை வெளியிட்டு உள்ளார்.

Actress Kajal Agarwal Video For Health Tips Preganacy

நான் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகிறேன், என் வாழ்நாள் முழுவதும் நான் வேலை செய்து வருகிறேன். கர்ப்பம் என்பது ஒரு வித்தியாசமான உணர்வு, சிக்கலில்லாமல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும், தங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான முறையில் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். கர்ப்பத்திற்கும் முன்பும் கர்ப்பத்திற்கும் பின்பும், இந்த உடற்பயிற்சி உதவியாக இருக்கும்.

இந்த பயிற்சி நமது உடலை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி செய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தனது பயிற்சியாளர் உடன் அவர் ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவித்து வருகிறது.

Share this post