அனுபமாவின் லிப்-லாக் வீடியோ வைரல்... ரசிகர்கள் ஷாக்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தாறுமாறு ஹிட் ஆகி வசூல் வேட்டை செய்த ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய அனுபமா, கொடி திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.
தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலயில் தற்போது, அதர்வா உடன் தள்ளி போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கைவசம் சில தெலுங்கு திரைப்படங்களை வைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற, தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது, இவர் நடிப்பில் வெளியான லிப்லாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


