இலியானா, தமன்னான்னு சொல்றீங்களே.. எங்க சிம்ரன பாத்துட்டு சொல்லுங்க டா.. viral unseen throwback photos
ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதனைத் தொடர்ந்து, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கிய நிலையில், ஒன்ஸ் மோர் மற்றும் விஐபி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் பேவரைட் ஆக மாறினார்.

பின்னர், நேருக்கு நேர், நட்புக்காக, அவள் வருவாளா என பல திரைப்படங்களில் அதிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், கமல் ஹாசன், அர்ஜுன், பிரபு தேவா என டாப் ஹீரோக்களுடன் நடித்து நிறைய வெற்றி படங்களை தந்துள்ளார்.

இவரது ஸ்லிம் உடல்வாகு, அழகான முகத்தோற்றம் காரணமாக பல வருடங்களாக டாப் வரிசையில் கொண்டாடப்பட்டவர். தெலுங்கு மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இடுப்பழகி சிம்ரன் என சொல்லும் அளவிற்கு மிடுக்கான ஸ்லிம் இடுப்புக்கு பெயர் போனவர்.

தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது நடுவராகவும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆகவும் வரும் சிம்ரன், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது throwback பிகினி புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.