701 கி.மீ. தொலைவுக்கு பசுமை பாலங்கள்.. சுரங்கப்பாதைகள்.. கூடிய மும்பை - நாக்பூர் 6 வழி விரைவுச்சாலை !
நாட்டில் முக்கிய நகரங்களுக்கு மத்தியில் விரைவு சாலை அமைக்க மத்திய போக்குவரத்து துறை நிறைய ஏற்பாடுகள் செய்து வருகிறது. சமீபத்தில், திரிசூர் - பாலக்காடு குகை விரைவுச் சாலை நல்ல வரவேற்பை பெற்றது. பல மைல் கிலோமீட்டர் சுத்தி வரும் அளவிற்கு இருந்த பாதை, தற்போது எளிதில் மக்கள் பயணிக்கும் விதத்தில் மாறியுள்ளது.
தற்போது, நாட்டிலேயே முதல் முறையாக மும்பை - நாக்பூர் நகரங்களிடையே 701 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 வழி சாலை அமைக்கப்படவுள்ளது. மேலும், இதில் காட்டு விலங்குகள் செல்வதற்கு வசதியாக 9 பசுமை பாலங்கள், 17 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
நெடுஞ்சாலைகளில் விலங்குகள் அடிபட்டு இறப்பதை தடுக்கவே இந்த வித வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Share this post